சுற்றறிக்கை: தொகுதி நிகழ்வுகளை வலைதளம் மற்றும் மாத இதழில் ஆவணப்படுத்துதல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி

204

சுற்றறிக்கை: தொகுதி நிகழ்வுகளை வலைதளம் மற்றும் மாத இதழில் ஆவணப்படுத்துதல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி

உறவுகளுக்கு வணக்கம்!

நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் (www.naamtamilar.org) மற்றும் அதிகாரப்பூர்வ மாத இதழான ‘புதியதொரு தேசம் செய்வோம்’ மற்றும் அதிகாரப்பூர்வச் சமூக வலைதளங்களில், தொகுதிகளில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள், மக்கள் நலப் பணிகள், கட்சி நிகழ்வுகள் பற்றிய செய்திகள், புகைப்படங்கள், காணொளிகள் போன்றவைப் பதிவேற்றப்பட்டுவருகிறது. இப்பணியை மேலும் செழுமைப்படுத்திட மாவட்ட / தொகுதி / பாசறைப் பொறுப்பாளர்களின் பங்களிப்பு மிகவும் தேவையாகிறது.

எனவே மாவட்ட / தொகுதி / பாசறைப் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் கட்சி நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து, ஆவணப்படுத்தி, தொகுதிச் செய்தித்தொடர்பாளர் / தொகுதிச் செயலாளர் / தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் மூலம் தொகுதிக்கான அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நாம் தமிழர் வலைதளம் வாயிலாகவோ, நாம் தமிழர் செயலி வாயிலாகவோ அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஒரே நிகழ்வைப் பலர் அனுப்புவதால் பல வழிகளில் பதிவேற்றுவதில் குழப்பம் ஏற்படுகிறது நேரமும் வீணாகி மற்ற செய்திகளைப் பதிவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே தொகுதிப் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து செய்திகளைச் சேகரித்து, ஆவணப்படுத்தி ஒரே செய்தியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை அனுப்பும்போது, நிகழ்வு பற்றிய சிறு தலைப்பு, நிகழ்வு நடைபெற்ற நாள், நேரம், இடம், ஒருங்கிணைத்தவர்கள், பங்கேற்றவர்கள் விவரம், நிகழ்வு பற்றிய சிறு குறிப்பு, புகைப்படங்கள், காணொளி இணைப்பு ஆகியவற்றோடு செய்தி அனுப்புபவர் பெயர், தொகுதி, பொறுப்புநிலை, தொடர்பு எண் ஆகியவற்றைத் தவறாமல் உள்ளிடவும்.

செய்திகளை அனுப்பும் முறைகள்:

நேரடி மின்னஞ்சல் வாயிலாக: seithigal@naamtamilar.org / naamtamizharseithigal@gmail.com

கட்சி வலைதளம் வாயிலாக: https://www.naamtamilar.org/submit-your-event-news/

நாம் தமிழர் செயலி : https://play.google.com/store/apps/details?id=naamtamilar.android.app

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி