சுற்றறிக்கை: அக். 04, பனைத் திருவிழா – 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு | சுற்றுச்சூழல் பாசறை

92

சுற்றறிக்கை: அக். 04, பனைத் திருவிழா – 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு | நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறை

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக வரும் அக்டோபர் 4, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவிருக்கும் பனைத்திருவிழாவில், தமிழ்நாடு முழுவதும் 10 இலட்சம் பனை விதைகள் நடவு செய்யத் திட்டமிட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பனை விதை நடவு முறையிலிருந்து சற்றே மாறுபட்ட விதமாக தொகுதிவாரியாக, கூட்டமாய்க் கூடி பனை விதை நடவினை முன்னெடுக்காமல், இந்த ஆண்டிற்கான பனைத்திருவிழாவினை உறவுகள் தத்தம் வீடுகளுக்கு அருகிலுள்ள, விதை நடவுக்கு ஏற்ற இடத்தினைத் தேர்வுசெய்து, அங்கே நட வேண்டுமெனவும், அதனை ஆவணப்படுத்தித் தலைமையகத்துக்கு அனுப்ப வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கொரொனா தொற்றின் தீவிரத்தை அலட்சியப்படுத்தாமல் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக இத்தகைய முன்னெடுப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் 4, ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் செந்தமிழன் சீமான் அவர்கள் துவங்கி வைக்க, தமிழகமெங்கும் உள்ள சுற்றுச்சூழல் பாசறை உறுப்பினர்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இப்பனைத்திருவிழாவைப் பேரெழுச்சியாக முன்னெடுத்து இந்த மண்ணையும் மக்களையும் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு பெருமையடைய வேண்டுமென்று அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

கிருமி தொற்றின் காரணமாக அசாதாரணமானச் சூழல் நிலவுவதால் பனை விதை சேகரிப்பில் ஈடுபடுவோர் கையுறை, நாசிக்கவசம் போன்ற முறையான பாதுகாப்பு முறைகளைக் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்:
வெண்ணிலா: +91-9884323380
விஜயராகவன்: +91-8939818797

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஆவடி தொகுதி
அடுத்த செய்திசுற்றறிக்கை: தொகுதி நிகழ்வுகளை வலைதளம் மற்றும் மாத இதழில் ஆவணப்படுத்துதல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி