க.எண்: 2023040145
நாள்: 04.04.2023
அறிவிப்பு:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கட்சியின் அதிகாரப்பூர்வ இதழுக்கு ஒவ்வொரு பொறுப்பாளர்களும் சந்தாதாரராவது கட்டாயமாக்கப்படுகிறது. தற்போது பொறுப்பில் உள்ள கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலை கட்சி மற்றும் பாசறைப் பொறுப்பாளர்கள் அனைவரும் ‘புதியதொரு தேசம் செய்வோம்’ இதழுக்கான ஆண்டு சந்தாக்கட்டணத்தை (ரூ.350/- அஞ்சல் செலவு உட்பட) உடனடியாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இனிவரும் காலங்களில் புதிதாகப் பொறுப்புகளுக்குப் பரிந்துரைக்கப்படும் இறுதிப்பட்டியலை தலைமை ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதலுக்கு அனுப்பும்போது, பட்டியலிலுள்ள அனைவரும் ஆண்டு சந்தாக்கட்டணம் செலுத்தியதற்கான விவரங்களையும் கட்டாயம் இணைத்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பின்வரும் வங்கிக்கணக்கில் ஆண்டுக்கட்டணம் செலுத்தியப் பிறகு அதன் விவரங்களை பரிந்துரை பட்டியலோடு அனுப்பும் பொழுது அது உறுதிசெய்யப்பட்டு, மாதந்தோறும் பொறுப்பாளர்களின் முகவரிக்கு இதழ் அனுப்பி வைக்கப்படும்.
வங்கி கணக்கு விவரம்:
வங்கி கணக்கின் பெயர்: எங்கள் தேசம் ( Engal Thesam )
வங்கி பெயர்: இந்தியன் வங்கி ( Indian Bank )
வங்கி கணக்கு எண்: 6325605143
கிளை: மப்பேடு ( Mappedu )
IFSC Code: IDIB000M119
Gpay/PhonePe UPI: 9092529250
இதழ் குறித்த தொடர்புக்கு: 9500767589 / 9095859921 / 9600709263
மின்னஞ்சல்: puthiyathorthesam@gmail.com
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு