அறிவிப்பு: சன. 16, சீமான் தலைமையில் தமிழ் நாள் பெருவிழா – சென்னை அண்ணாநகர்

480

க.எண்: 2023010025அ

நாள்: 10.01.2023

அறிவிப்பு:

தமிழ் நாள் பெருவிழா
(சன. 16, சென்னை – அண்ணாநகர்)

     அன்னைத் தமிழ்மொழி காக்க, தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி, கொடுஞ்சிறையில் வாடி, உயிர்நீத்து, மொழிப்போருக்கு உணர்வுச்சூடேற்றிய முதல் ஈகி, ஐயா இல.நடராசன் அவர்களின் ஈகத்தைப் போற்றும் விதமாக, அவரது நினைவுநாளினை ‘தமிழ் நாள்’ என்று பேரறிவிப்பு செய்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாளினை நாம் தமிழர் கட்சியும் உலகெங்கிலும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளும் சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர்.

அவ்வகையில் நடப்பு ஆண்டும், தமிழ் நாள் மற்றும் திருவள்ளுவர் நாளினை முன்னிட்டு வருகின்ற 16-01-2023 திங்கள்கிழமையன்று மாலை 04 மணியளவில், சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், நூறடிச் சாலையில் அமைந்துள்ள கே.எம்.இராயல் மகால் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளோடும், தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தமிழ்த்தேசிய ஆளுமைகளின் கருத்துரைகளோடும்
தமிழ் நாள் பெருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது. நிறைவாக, செந்தமிழன் சீமான் அவர்கள் பெருவிழாப் பேருரையாற்றவிருக்கிறார்.

இப்பெருவிழாவில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி