அறிவிப்பு: நவ.26, தமிழர் எழுச்சி நாள் விழா – செஞ்சி (விழுப்புரம்)

230

க.எண்: 2022110503
நாள்: 14.11.2022

அறிவிப்பு: நவ.26, தமிழர் எழுச்சி நாள் விழா – செஞ்சி (விழுப்புரம்)

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68ஆம் ஆண்டு  பிறந்தநாளையொட்டி, வருகின்ற 26-11-2022 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் உள்ள வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தமிழர் எழுச்சி நாள் விழா கொண்டாடப்படவிருக்கின்றது.

நவம்பர் 26
தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!
தமிழர் எழுச்சி நாள் விழா
26-11-2022 சனிக்கிழமை, காலை 10 மணியளவில்
விழாப் பேருரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
வள்ளி அண்ணாமலை திருமண மண்டபம்
செஞ்சி, விழுப்புரம் மாவட்டம்

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் உணர்வெழுச்சியுடன், பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருவைகுண்டம் தொகுதி பனை விதை விதைத்தல்
அடுத்த செய்திசவுக்கு சங்கர் மீதான திமுக அரசின் தொடர் பழிவாங்கும் போக்கு அதிகார அடக்குமுறையின் உச்சம்! – சீமான் கடும் கண்டனம்