தமிழக வரலாற்று அறிஞர் பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி! – நேரில் சென்று நலம் விசாரித்த சீமான்

47

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக வரலாற்று அறிஞரும், ஆசிவக கோட்பாட்டை ஆய்ந்தறிந்து வரையறுத்தவருமான பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்களை நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ந.சந்திரசேகரன் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் ஆகியோர் 30-10-2022 அன்று நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

உடன் மருத்துவ பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இரா.இளவஞ்சி, உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.