திருப்போரூர் பேரூராட்சித்துணைத்தலைவர் ராஜ் மறைவு – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் துயர் பகிர்வுச் செய்தி

53

நாம் தமிழர் கட்சியின் திருப்போரூர் பேரூராட்சித்துணைத்தலைவரும், களப்போராளியுமான அன்புத்தம்பி ராஜ் அவர்கள் விபத்தினால் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயருமடைந்தேன். தம்பிக்குத் திருமணம் உறுதிசெய்யப்பட்டு, அதற்குரிய நாட்கள் நெருங்கி வந்த நிலையில் பெரும் விபத்தில் சிக்குண்டதால், திருமண நாளன்றே மரணித்தது மனதைக் கனக்கச் செய்கிறது. ஈடுசெய்யவியலாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பியின் குடும்பத்தாரைத் தேற்ற சொற்களின்றி கலங்கித் தவிக்கிறேன்.

வாழும்போது மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உழைத்த தம்பி, இறந்தப் பிறகு உடல்உறுப்புகள் கொடையின் மூலம் மற்றவர்களை வாழச்செய்கிறாரென்பது நெகிழ்ச்சியைத் தருகிறது.கொடுந்துயருக்கு ஆட்பட்டிருக்கும் தம்பியின் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பிக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஏற்காடு தொகுதி தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்குதல்