சுற்றறிக்கை: இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல் மற்றும் சங்கத் தமிழிசைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு

243

க.எண்: 2022090393

நாள்: 08.09.2022

சுற்றறிக்கை:

செப்.11, சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல் மற்றும் சங்கத் தமிழிசைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு
மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி வருகின்ற 11-09-2022 ஞாயிற்றுக்கிழமையன்று
காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வழங்கும் தமிழோசை – சங்கத் தமிழிசைத் திருவிழாவானது
செப்டம்பர் மாதம் 17-ஆம் நாள் சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில்,
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கிறது.

அதனைத்தொடர்ந்து, காலை 11:30 மணியளவில் சங்கத் தமிழிசைத் திருவிழாவிற்கான நிகழ்வு ஒருங்கிணைப்பு மற்றும் களப்பணிகள் குறித்து கலந்தாய்வு செய்து திட்டமிடுவதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.

எனவே, செப்.11 அன்று நடைபெறவிருக்கும் நினைவேந்தல் மற்றும் கலந்தாய்வில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (செப்.10, சென்னை தி.நகர்)
அடுத்த செய்திதிருச்சி மேற்கு தொகுதி ஐயா வ.உ.சிதம்பரனார்க்கு புகழ் வணக்க நிகழ்வு