கிள்ளியூர் ஒன்றியச் செயலாளர் ஹென்றி ஜோசப் மறைவு! – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி

23

நாம் தமிழர் கட்சி – கிள்ளியூர் தொகுதியின் கிள்ளியூர் ஒன்றியச் செயலாளர் அருமைச் சகோதரர் ஹென்றி ஜோசப் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

தமிழ்த்தேசியத்தின் மீது கொண்டிருந்த மிகுந்த பற்றின் காரணமாக, நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, சமரசமற்று பணியாற்றிய ஆற்றல்மிகு களப்போராளியின் இழப்பு எதன் பொருட்டும் ஈடுசெய்யவியலாதது.

அவரை இழந்து வாடும் சகோதரரின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

சகோதரர் ஹென்றி ஜோசப் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி