தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் இரா.பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்வு – சீமான் நினைவுரை

45

இன்று 17-10-2020 சனிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை, மேற்கு கே கே நகரில் உள்ள அசோகா பார்க் இன் மண்டபத்தில், தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் பெருந்தமிழர் இரா.பத்மநாபன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இருவரது திருவுருவப் படத்திற்கும் நினைவுச் சுடரேற்றி மலர் வணக்கம் செய்யப்பட்டது.

இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இராவணன், அன்புத்தென்னரசன், கதிர் இராஜேந்திரன், வெற்றிக்குமரன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசப் பாண்டியன், மாநிலச் செய்திப்பிரிவு செயலாளர் பாக்கியராசன், ஆன்றோர் அவையம் புலவர் மறத்தமிழ்வேந்தன், வழக்கறிஞர் பாசறை சுரேஷ் குமார், உழவர் பாசறை  சின்னண்ணன், வணிகர் பாசறை சரவணன், தென்சென்னை மத்திய மாவட்டச் செயலாளர் புகழேந்தி, மதுரவாயல் ஆனந்த், விருகம்பாக்கம் ஆனந்த், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார், மாணவர் பாசறை சாரதிராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பலர் பங்கேற்றனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விருகம்பாக்கம் தொகுதி உறவுகள் செய்திருந்தனர்.

புகைப்படங்கள்

[WRGF id=106593]

இறுதியாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  நினைவுரையாற்றினார்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி