சுற்றறிக்கை: உழவர் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக

240

சுற்றறிக்கை: உழவர் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி

உழவு இல்லையென்றால், உணவு இல்லை! உணவு இல்லையென்றால், உயிர்கள் இல்லை! உயிர்கள் இல்லையென்றால், உலகு இல்லை! எனவேதான், உழவை மீட்போம்! உலகை காப்போம்! என்ற பெருமுழக்கத்தை முன்வைத்து தொன்றுதொட்ட நமது பாரம்பரிய வேளாண்மையை மீட்டெடுக்க, நாம் தமிழர் கட்சியின் சார்பாக உழவர் பாசறையைத் தொடங்கிச் சீரிய முறையில் களப்பணியாற்றி வருகிறோம். உழவர் பாசறையின் களப்பணிகளுக்கும், செயல்திட்ட முன்நகர்விற்கும் மாவட்டம், தொகுதி, ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலைகளுக்கும் பாசறைப் பொறுப்பாளர்களை நியமித்து, பாசறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதும் விரிவுபடுத்துவதும் காலத்தேவையாகிறது.

ஆதலால் முதற்கட்டமாக, உழவர் பாசறைக்குத் தொகுதிச் செயலாளர், தொகுதி இணைச் செயலாளர், தொகுதித் துணைச் செயலாளர் என்ற முறையில் அனைத்து தொகுதிகளுக்கும் வேளாண்மையில் பட்டறிவும் ஈடுபாடும், களப்பணிகளில் ஆர்வமும் உள்ள உறவுகளை, மாவட்ட/தொகுதிப் பொறுப்பாளர்கள் தெரிவுசெய்து அவர்களது விவரங்களைச் சேகரித்து, கீழ்காணும் தொடர்பு எண்ணில் தலைமை அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு:

மு.க.சின்னண்ணன்
உழவர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர்
பேச: +91-7811802118, 8610170567

 

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஒன்றிய கலந்தாய்வு – சேந்தமங்கலம்