துறைமுகம் மற்றும் வேளச்சேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு – சென்னை மாவட்டம்

196

செய்திக்குறிப்பு: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு – சென்னை மாவட்டம் | துறைமுகம் மற்றும் வேளச்சேரி தொகுதிகள்  | நாம் தமிழர் கட்சி

கடந்த 22-06-2019 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநிலக் கட்டமைப்புக் குழு – கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளுக்கானப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டங்கள், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவருகின்றன.

இன்று 27-06-2019 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் துறைமுகம் மற்றும் வேளச்சேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் நா.சந்திரசேகர் மற்றும் மாநிலக் கட்டமைப்புக் குழுவைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இராவணன், அன்புத்தென்னரசன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசப் பாண்டியன், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி, வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சுரேஷ்குமார், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

கலந்தாய்வின் அடிப்படையில் வேளச்சேரிதொகுதிக்கானப். புதிய பொறுப்பாளர்கள் பட்டியலை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்தார்.

வேளச்சேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் விவரம்:
தலைவர்               –      ஜெபமணி
துணைத் தலைவர்      –      ஜெயபாபு
துணைத் தலைவர்      –      முருகன்
செயலாளர்             –      குட்டிமணி ச.ஜெகன்
இணைச் செயலாளர்    –      இராமநாதன்
துணைச் செயலாளர்    –      பாலகுமார்
பொருளாளர்            –      பிரசன்னகுமார்
செய்திதொடர்பாளர்     –      சாந்தகுமார்

இந்த கலந்தாய்வில் உட்கட்சிக் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும், எதிர்வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைத் திறம்பட எதிர்கொள்ளும் பொருட்டு முன்னதாக மேற்கொள்ளவேண்டிய களப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்:201906100)
அடுத்த செய்திகஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் அவரது தாய் மீது கொலைவெறி தாக்குதல்