செந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள் கலைப்பண்பாட்டு விழா – 2019

133

நாம் தமிழர் கட்சியின் சர்வதேச பிரிவான செந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள்-2019 கலைப்பண்பாட்டு விழா இந்தியன் கிளப் எனும் இடத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழகத்திலிருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிமாயுன் கபீர் மற்றும் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் பாரம்பரிய பொங்கல், பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன், தமிழ் உறவுகள் பல நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வு பகரைனில் தமிழகத்தின் ஒரு பகுதியாகவே காட்சியளித்தது.

நிகழ்ச்சி நிரல்:

காலை 8.00மணியளவில் மகளிர் பாசறை உறவுகள் சிறப்பு அழைப்பாளர்களுக்கு மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்தார்கள். தொடர்ந்து கோலப்போட்டி, மண்பானைப் பொங்கல் வைத்து இயற்கை அன்னை மற்றும் கதிரவன் வழிபாட்டோடு விழா தொடங்கியது.

காலை 9.30மணிக்கு மேல் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. உறியடித்தல்,
கயிறு இழுத்தல், குளம்கரை, இசை நாற்காலி (மகளிர்), எலுமிச்சை அகப்பை (மழலையர்)

நண்பகல் 12.00மணியளவில் 19வகையான பாரம்பரிய, அறுசுவை உணவு உறவுகள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

மாலையில் 5 மணியளவில் அகவணக்கம்,வீரவணக்கம்,உறுதி மொழியுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. வரவேற்புரை பக்ரைன் செந்தமிழர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு.வில்சன் அவர்கள் ஆற்றினார்கள். மகளிர் மற்றும் மழலையர் கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றம்.

இரவு 7.30 மணியளவில் சுல்தான் பேகம் அவர்கள் கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை தொகுப்புகளை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்கள் திரு.ஹிமாயுன் கபீர், திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் சிறப்புரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

முந்தைய செய்திநாம் தமிழர் மகளிர்க்கான அரசியல் பயிற்சி பட்டறையை தொடங்கிவைத்த சீமான் – திருச்சி
அடுத்த செய்திசுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி