நாம் தமிழர் மகளிர்க்கான அரசியல் பயிற்சி பட்டறையை தொடங்கிவைத்த சீமான் – திருச்சி

187

செய்தி:   நாம் தமிழர் மகளிர்க்கான அரசியல் பயிற்சி பட்டறையை தொடங்கிவைத்த சீமான் – திருச்சி  | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தனித்து களம் காணவிருக்கிறது. இதில் பெண்களுக்கு சரிபாதி தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டு கற்றுத்தேர்ந்த ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் போன்ற பெண் வேட்பாளர்களைத் தேர்வு செய்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடவிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பரப்புரை, தொலைக்காட்சி விவாதங்கள், அரசியல் கருத்தரங்கங்கள், துண்டறிக்கை பரப்புரை, வீடுதோறும் பரப்புரை, கிராமசபை கூட்டங்களை நடத்துதல் போன்ற பயிற்சிகளைப் பெண்களுக்கு வழங்கும் வண்ணம் அரசியல் பயிற்சி பட்டறையை இன்று 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற தொடக்கவிழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று அரசியல் பயிற்சி பட்டறையைத் தொடங்கிவைத்து அரசியலில் பெண்களின் இன்றியமையாத் தேவை குறித்தும், பெண்களுக்கான பயிற்சிகள் குறித்த அறிமுகத்தையும், பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்தவர்களுக்கு வாழ்த்துரையும் வழங்கினார்.

முன்னதாக காஷ்மீரில் நடைபெற்ற புல்வாமா கொடுரத்தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

செய்தியாளர் சந்திப்பு:


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திமொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திசெந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள் கலைப்பண்பாட்டு விழா – 2019