தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி
விழுப்புரம் மாவட்டத்தின் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிசிவந்தியம் மற்றும் திருக்கோவிலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு மண்டலத்தின் செயலாளராக சே.மொ.சர்புதின்(10222347561) அவர்களை இன்று (26-12-2018), தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நியமித்துள்ளார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி