சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் (தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)

106

சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்
(தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)
 | நாம் தமிழர் கட்சி

கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும் சந்தித்து கட்சியின் உட்கட்டமைப்பை முறைபடுத்திவருகிறார். எனவே தலைமைக்கு ஒத்துழைப்பு நல்கி அனைத்து மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்களது மாவட்டத்திற்குட்பட்ட தொகுதி, மாநகர, நகர, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி, வட்டம், கிளை குறித்த விவரங்கள் அடங்கிய தொகுதி உட்கட்டமைப்புப் பட்டியலை விரைந்து தலைமை அலுவலகத்திற்கு அஞ்சல் மூலமோ நேரடியாகவோ அல்லது (ravanankudil@gmail.com) மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பிவைக்கும்படி கடந்த 30-01-2018 சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு வெற்றிகரமாக நடைபெற்றது.

வருகின்ற 23-05-2018 (புதன்கிழமை) காலை 10 மணிமுதல் பிற்பகல் 02 மணிவரை தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்துரையாடி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்கிறார்.

அதனைத்தொடர்ந்து பிற்பகல் 02 மணிமுதல் மாலை 06 மணிவரை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட கிருஷ்ணகிரி, பர்கூர், ஓசூர், ஊத்தங்கரை, வேப்பனஹள்ளி மற்றும் தளி சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்துரையாடி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்கிறார்.

சந்திப்பு நடைபெறும் இடம் விரைவில் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்படும்.

அவ்வயம் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டுள்ள தொகுதிகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் புதிய பொறுப்புகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் உறுப்பினர் அடையாள அட்டையுடன் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
பேச: +91-9600709263

முந்தைய செய்திசுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் (வேலூர் மாவட்டம்)
அடுத்த செய்திசேலம் – சென்னை 8 வழி சாலை மற்றும் சேலம் விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் | சீமான், பியுஸ்மனுஷ் பங்கேற்பு