காவிரி நதிநீர் உரிமை மீட்புப் பொதுக்கூட்டம் – ஓசூர் (இராம் நகர்)

74

கட்சி செய்திகள்: காவிரி நதிநீர் உரிமை மீட்புப் பொதுக்கூட்டம் – ஓசூர் (இராம் நகர்) | நாம் தமிழர் கட்சி

கடந்த 18-03-2018 ஞாயித்துக்கிழமையன்று மாலை 5:00 மணியளவில் கிருட்டிணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இராம் நகரில் நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி நதிநீர் உரிமை மீட்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்திற்கு கிருட்டிணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.தமிழ்மாறன் அவர்கள் தலைமை ஏற்றார், கிருட்டிணகிரி மண்டலச் செயலாளர் திரு.கரு பிரபாகரன் மற்றும் ஓசூர் தொகுதிச் செயலாளர் திரு. தே.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகவணக்கம், வீரவணக்கம் மற்றும் உறுதிமொழியை ஓசூர் இளைஞர் பாசறை செயலாளர் திரு. இராமமூர்த்தியும்,
வரவேற்புரையை கிருட்டிணகிரி மேற்கு மாவட்டப் பொருளாளர் திரு. அருண்சேரனும், தொடக்கவுரையை கிருட்டிணகிரி மண்டலத் தலைவர் திரு. சம்பத் அவர்களும், சிறப்புரையை மகளிர் பாசறை இணைச் செயலாளர் திருமதி. கவிதா மற்றும் மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. தமிழ்மாறன் அவர்களும், நன்றியுரையை ஓசூர் தொகுதிச் செயலாளர் திரு. தே.தமிழ்ச்செல்வனும் ஆற்றினர்.

மேலும், மாநிலக் கொள்கைப்பரப்பு செயலாளர் திரு. புதுகை வெற்றிச்சீலன் அவர்கள் தமிழர் வரலாறு மற்றும் பண்பாடு, காவிரியில் தமிழருக்கான உரிமை மற்றும் காவிரி நதிநீர் மீட்பு அவசியம் குறித்து எழுச்சியுரையாற்றினார்.

முன்னதாக ஓசூர் ‘விடியல்’ கலைக்குழுவின் பறையிசையும், நாம் தமிழர் கட்சி – ஓசூர் தொகுதி: கலை இலக்கியப் பண்பாட்டு பாசறையினரின் விழிப்பணர்வு நாடகமும் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சி – ஓசூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் திறம்படச் செய்திருந்தனர்.

செய்தி:
செகதீசு மணிராசு,
மாவட்ட செய்தித் தொடர்பாளர்,
நாம் தமிழர் கட்சி,
ஓசூர்.
பேச: 9008003328