சீமான் அழைப்பு: மே 18, இன எழுச்சி நாள் – மாபெரும் பொதுக்கூட்டம் | பாம்பன் ( இராமநாதபுரம்)

306

மே 18, இன எழுச்சி நாள் – மாபெரும் பொதுக்கூட்டம் | பாம்பன் ( இராமநாதபுரம்) | நாம் தமிழர் கட்சி

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அழைப்புக் காணொளியில்  கூறியிருப்பதாவது,

மே 18, இனப்படுகொலை நாள்

சிங்களப் பயங்கரவாத அரசு, நம் தாய்நிலம் தமிழீழத்தைக் கொலைக்களமாக்கி நம் இனமக்களைக் கொன்றுகுவித்தது.
அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் பிள்ளைகள் இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதியைக் கேட்டு இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிற துயரம் தொடர்கிறது.
ஆறாத காயங்களோடும், அழுத விழிகளோடும் வீட்டை இழந்து, நாட்டை இழந்து ஏதிலிகள் என்ற இழிபெயரோடு இடம்பெயர்ந்து தவிக்கும் இனத்தின் பிள்ளைகள் நாம். இந்நிலையில் இருந்து மீள்வதற்கு, எல்லோரையும் போலப் பெருமையோடு வாழ்வதற்கு, தமிழர் தாய்நிலத்தைத் தமிழரே ஆள்வதற்கு, இருள்சூழ்ந்த நம் இன வாழ்வில் இருள்கிழித்து இளங்காலைக் கதிரொளியாய் எழுவோம்! வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தின் வேரிலிருந்து மொத்தமாகத் துளிர்ப்பது போலத் துளிர்த்தெழுவோம்!

மே 18, இராமநாதபுரம், பாம்பனில் மானத்தமிழ்ப் பிள்ளைகள் அனைவரும் மறக்காமல் கூடுவோம்!

தண்ணீர்க் கடலா? தமிழர்க் கடலா? என்று வியக்கவைக்கும்வண்ணம் ஒன்றுசேர்ந்து இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதியைப் பெறுவதற்கு, விழுவதெல்லாம் அழுவதற்கல்ல!
எழுவதற்கு என்ற முழக்கத்தை முன்வைத்து இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

நாம் தமிழர்!

-இவ்வாறு அந்த அழைப்புக் காணொளியில் சீமான் கூறியிருக்கிறார்