அழைப்பு : தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றிய விழிப்புணர்வு கூட்டம் – பெங்களுரு நாம் தமிழர்

28
அழைப்பு : தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றிய விழிப்புணர்வு கூட்டம்.
உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளைப் பெற்று சிறந்து வாழ்ந்திட உழைத்துக் கொண்டு இருக்கும் தங்களுக்கு கருநாடக மாநில நாம் தமிழர் கட்சியின் கணிப்பொறியாளர்கள் பிரிவின் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வருகிற 30 ஆம் தேதி (30-01-2011) காலை 10.00 மணிக்கு பெங்களுரு எம்.ஜி.ரோடு. ஓரியண்டல் வங்கியின் மேல் தளத்தில் கருநாடக மாநில நாம் தமிழர் கட்சியின் கணிப்பொறியாளர்கள் பிரிவின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றிய விழிப்புணர்வு கூட்டம் ஒன்றினை ஏற்ப்பாடு செய்துள்ளோம். அதற்குத் தங்களின் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் விபரங்களை விஜில்(9916110390) அவர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
இங்ஙனம்
மதன்
தலைவர்
கணினிப்பொரியாளர்கள் பிரிவு
நாம் தமிழர் கட்சி – கருநாடகம்.