முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – சமூகநீதிப் போராளி தாத்தா இம்மானுவேல் சேகரனார் நினைவிடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்வணக்கம்

13

க.எண்: 2026090253
நாள்: 09.09.2026

சாதிய இழிவையும், தீண்டாமைக் கொடுமைகளையும் ஒழிக்கப் போராடிய பெருந்தமிழர்! சமூகநீதிப் போராளி நமது தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவுநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள
தாத்தாவின் நினைவிடத்தில் நடைபெறவிருக்கும் நினைவுநாள் பெருநிகழ்வில்,
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆவணி 25ஆம் நாள் (11-09-2026) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பங்கேற்று மலர்வணக்கம் செலுத்தவிருக்கிறார்.
சமூகநீதிப் போராளி
தாத்தா இம்மானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர்வணக்கம்
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்: ஆவணி 25 வெள்ளிக்கிழமை | 11-09-2026 காலை 10 மணி முதல்
இடம்: பரமக்குடி (சந்தை கடை அருகில்)
இராமநாதபுரம் மாவட்டம்
இந்நிகழ்வில், கட்சி மற்றும் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக் கலந்தாய்வுக் கூட்டம்