க.எண்: 20260900252
நாள்: 08.09.2026
சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக் கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற ஆவணி 27ஆம் நாள் 13-09-2026 மாலை 05 மணியளவில் ஆண்டிபட்டி பங்களா, வாடிப்பட்டி அருகில் உள்ள சந்திரசேகரன் அவர்களின் அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது.
இக்கூட்டத்தில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



