க.எண்: 2026070223
நாள்: 15.07.2026
அறிவிப்பு:
எழுத்தறிவித்த இறைவன் நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, திருப்பூர் மாவட்டம், செட்டியார்பாளையம், முத்தூரில் உள்ள கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி சார்பாக முன்னெடுக்கும் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றவிருக்கிறார்.
கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி சார்பாக எழுத்தறிவித்த இறைவன்
தாத்தா
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா சிறப்புரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
ஆடி 01 | 17-07-2025 காலை 10:30 மணியளவில்
இடம்:
கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி செட்டியார்பாளையம், முத்தூர்
திருப்பூர் மாவட்டம்
இவ்விழாவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுடன் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

