தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்,

130

க.எண்: 2025090761

நாள்: 03.09.2025

அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், பொதுச்செயலாளர் மருத்துவர் திருமால்செல்வன் மற்றும் வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் து.செந்தில்நாதன் ஆகியோரின் முன்னிலையில் வருகின்ற
07-09-2025 அன்று காலை 10 மணி முதல் சேலம், அரிசிப்பாளையம்,
காந்தி திடல் எதிரில் உள்ள காருண்யா அரங்கில் (Karunya Hall A/C) நடைபெறவிருக்கிறது.

 

இந்நிகழ்வில் சேலம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருநெல்வேலி இராதாபுரம் மண்டலம் (இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்