க.எண்: 2026030101
நாள்: 02.03.2026
அறிவிப்பு
அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த ம.தமிழரசன் (37487170059), க.செந்தில்குமார் (37487472289), வே.வரதராஜன் (15042514877) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளிலேயே தொடர்வார்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.
எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



