க.எண்: 2025121023
நாள்: 17.12.2025
அறிவிப்பு:
தென்காசி வாசுதேவநல்லூர் மண்டலத்திற்கான, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட 177ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பூ.சிவஞானப்பாண்டியன் (26528088655) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு,
தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். அதேபோன்று, மருத்துவப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட 166ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த மரு.பா.கற்பகராஜ் (26528216484) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
தென்காசி வாசுதேவநல்லூர் மண்டலச் செயலாளராக நியமிக்கப்பட்ட 266ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த அ.பாலசுப்பிரமணியன் (13923543987) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, உழவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். 209ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ப.வேல்முருகன் (18013432699) அவர்கள் தென்காசி வாசுதேவநல்லூர் மண்டலச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
53ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ந.ஞானசேகர் (26528024244) அவர்கள் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



