வள்ளலார் பெருவெளியைப் பார்வையிட்டு, பெருவெளியைக் காக்க நாம் தமிழர் கட்சி களத்தில் இறுதிவரை துணைநிற்கும் என்று சீமான் உறுதி!

22

சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முனையும் திமுக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மையத்தை, வடலூரில் வேறு பகுதியில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தொடர்ச்சியாகப் போராடிவரும் வடலூர் பொதுமக்கள் மற்றும் வள்ளளார் பெருமகனாரின் அடியவர்களையும் 08-01-2024 அன்று பார்வதிபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து, கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பின்னர் வள்ளலார் பெருவெளியைப் பார்வையிட்டு, பெருவெளியைக் காக்க நாம் தமிழர் கட்சி களத்தில் இறுதிவரை துணைநிற்கும் என்றும் உறுதியளித்தார்.

முந்தைய செய்திபொங்கல் விடுமுறையையொட்டி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 3 வேலை நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகடலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் – 2025!