கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். (குறள் 393)
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. (குறள் 396)
– தமிழ்மறையோன் வள்ளுவப் பெரும்பாட்டன்
ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் – பல்-
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வம் உண்-
டாமெனல் கேளீரோ?
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கு மதியிலிகாள்! – எத-
னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வம் என்-
றோதி யறியீரோ?
– பெரும்பாவலன்
நம் பாட்டன் பாரதியார்
அறிவே தெய்வம்!
அன்பு உறவுகள் அனைவருக்கும்
கலைமகள் வழிபாட்டு நாள் நல்வாழ்த்துகள்!
https://x.com/Seeman4TN/status/1844947845234737415
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி