பழங்குடியினர் மானுட இனத்தின் முதல் மாந்தர் மட்டுமல்லர்; மனித இனத்தின் ஆதி மூல அடிச்சுவடுகள்!
தாம் பிறந்த பூமியைத் தாய் மடியாய் போற்றி, துளியும் சிதைக்காமல், வளக் கொள்ளை என்ற பெயரில் காயப்படுத்தாமல், இயற்கை அன்னையை அறிவியல் உளிக் கொண்டு இடறாமல் எளிய வாழ்வு வாழும் முது குடியினர்!
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுத்து வாழ்ந்த தமிழர் வரலாற்றின் மூத்த ஆணி வேர் குறவர் குடிமக்கள். உலகம் முழுக்கப் பல நாடுகளில் சிறு சிறு இனக்கூட்டமாகச் சிதறி வாழ்ந்தாலும் அவர்கள்தான் மானுட தோற்றத்தின் மகத்தான தொட்டில்கள்!
காலங்காலமாய் வாழ்ந்து வந்த வனம் இழந்து, நிலமிழந்து, உரிமைகள் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் நசுக்கப்பட்டு, விளிம்பு நிலையில் நலிந்த மக்களாய் வாழும் ஒவ்வாரு பழங்குடி மூத்தோனையும் காத்து, அவர்களது உரிமைகளுக்காகப் போராட உலகச் சமூகம் முன்வர வேண்டுமென உலகப் பழங்குடியினர் நாளில் உளமார உறுதி ஏற்போம்!
https://x.com/Seeman4TN/status/1821777566467809341?t=tapQAo7fjB8i6Yf2J7um0Q&s=19
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி