துயர் பகிர்வு: ஆரல்வாய்மொழி பேரூராட்சியைச் சேர்ந்த ச.பாலேந்திரன் மறைவு – குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல்

141

நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பேரூராட்சியைச் சேர்ந்த அன்புத்தம்பி ச.பாலேந்திரன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி பாலேந்திரன் அவர்களை இளவயதிலேயே இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

தம்பியை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி ச.பாலேந்திரன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

https://x.com/Seeman4TN/status/1755261430998176075?s=20

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் – 2024!
அடுத்த செய்திபார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில் அவர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்