அறிவிப்பு: கல்வி வள்ளல் பா.கா.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்க நிகழ்வு – தலைமை அலுவலகம்

152

க.எண்: 2023040139

நாள்: 03.04.2023

அறிவிப்பு:
கல்வி வள்ளல் பா.கா.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்க நிகழ்வு
(ஏப்.04, கட்சித் தலைமை அலுவலகம்)

கல்வி வள்ளல் நமது ஐயா பா.கா.மூக்கையாத் தேவர் அவர்களின் 100ஆம் ஆண்டு பிறந்தநாளான 04-04-2023 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் ஐயா பா.கா.மூக்கையாத்தேவர் அவர்களின் நூற்றாண்டு புகழ்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவழக்கறிஞர்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதஞ்சாவூர் வடசேரியில் புதிதாக நிலக்கரி ஆய்வு செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பது வேளாண் குடிகள் மீது தொடுக்கப்படும் அரச பயங்கரவாதம்! – சீமான் கண்டனம்