அறிவிப்பு: ஏப். 15, கல்வி வள்ளல் பா.க.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – உசிலம்பட்டி

220

க.எண்: 2023040142
நாள்: 04.04.2023

அறிவிப்பு:

கல்வி வள்ளல் நமது ஐயா பா.க.மூக்கையாத் தேவர் அவர்களின்
100ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற 15-04-2023 சனிக்கிழமை, மாலை 4 மணியளவில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோயில் திடலில் (தேனி-மதுரை நெடுஞ்சாலை அருகில்) கல்வி வள்ளல் பா.க.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

தேவர் தந்த தேவர்
கல்வி வள்ளல்
பா.க.மூக்கையாத்தேவர்
நூற்றாண்டு புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்

புகழுரை:
செந்தமிழன் சீமான்
15-04-2023 சனிக்கிழமை, மாலை 04 மணிக்கு

இடம்:
உசிலம்பட்டி
(முருகன் கோயில் திடல்)

இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் உணர்வெழுச்சியோடு பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமகாவீரர் திருநாளைக் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக, தமிழர்கள் இறைச்சி உண்ண தடைவிதிப்பதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திகல்வி வள்ளல் பா.க.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்க நிகழ்வு – தலைமை அலுவலகம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு