துயர் பகிர்வு:
நாம் தமிழர் கட்சி – அரூர் தொகுதியின் மொரப்பூர் கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் அன்புத்தம்பி பிரபாகரன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடிவரும் மாபெரும் புரட்சிகர இயக்கமான நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பெரும்படையில் தன்னையும் இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றிவந்த தம்பி பிரபாகரன் அவர்கள் இளவயதிலேயே நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி மொரப்பூர் பிரபாகரன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி