நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து கடலூரில் சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

362

க.எண்: 2023030094

நாள்: 10.03.2023

அறிவிப்பு:

சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏழை, எளிய மக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணை நின்று, காவல்துறையினரின் மூலம் அடக்குமுறைகளை ஏவி, அப்பாவி வேளாண் பெருங்குடி மக்களைக் கைது செய்யும் திமுக அரசின் எதேச்சதிகாரபோக்கைக் கண்டித்தும், நிலம் வழங்கிய குடும்பங்களுக்கு ஒப்பந்தப்படி பணி வழங்காமலும், ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், தமிழ் இளைஞர்களுக்குப் பணி வழங்காமலும் தொடர்ந்து இனப்பாகுபாடு கடைப்பிடிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 14-03-2023 அன்று கடலூர் மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.

விளை நிலங்களைப் பறிக்கும்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணைபோகும்
திமுக அரசின் எதேச்சதிகாரபோக்கைக் கண்டித்து

செந்தமிழன் சீமான் தலைமையில்

மாபெரும் ஆர்ப்பாட்டம்
14-03-2023 செவ்வாய்க்கிழமை

இடம்:
கடலூர் மாவட்டம்

இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு, கடலூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள விழுப்புரம், புதுச்சேரி, அரியலூர், பெரம்பலூர், நாகை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் கலந்தாய்வு மேற்கொண்டு, களப்பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்துமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமனிதம் போற்றும் ‘அயோத்தி’! ஒவ்வொருவரும் போற்றவேண்டிய படைப்பு! – படக்குழுவினருக்கு சீமான் பாராட்டு
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி பிள்ளையார் பாளையம் கார்த்திக் மறைவு – உறவுகளுக்கு சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி