காஞ்சிபுரம் தொகுதி பிள்ளையார் பாளையம் கார்த்திக் மறைவு – உறவுகளுக்கு சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி

296

துயர் பகிர்வு:

நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த பரப்புரையாளர் அன்புத்தம்பி பிள்ளையார் பாளையம் கார்த்திக் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

மண்ணுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் நலவாழ்விற்காகவும் எவ்வித சமரசமின்றி தொடர்ச்சியாகப் போராடிவரும் மாபெரும் புரட்சிகர இயக்கமான நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பெரும்படையில் தன்னையும் இணைத்துக்கொண்டு, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரும்பணியாற்றிவந்த தம்பி கார்த்திக் அவர்கள் இளவயதிலேயே நம்மைவிட்டுப் பிரிந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி பிள்ளையார் பாளையம் கார்த்திக் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து கடலூரில் சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்