அறிவிப்பு: திருச்சி சிறப்பு முகாமிலிருந்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகியோரை உடனடியாக விடுவிக்கக்கோரி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

61

க.எண்: 2023030098 

நாள்: 17.03.2023

அறிவிப்பு:

  31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டும், வெளியில் விடாமல் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட நான்கு தமிழர்களை உடனடியாக விடுவித்து, அவர்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ வழிவகை செய்வதற்குரிய சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து முன்னெடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெறவிருக்கிறது.

திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள
உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட
நான்கு தமிழர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி 

செந்தமிழன் சீமான்
தலைமையில்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

23-03-2023 வியாழக்கிழமை, மாலை 4 மணிக்கு

இடம்:
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்
(விக்னேஷ் உணவகம் எதிரில்)

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி