மீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி தழைக்கும் பிழைக்கும் என்ற நம்பிக்கையில் பொங்கட்டும் தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் புரட்சிப் பொங்கல்!

151

காலையில் எழுந்து
கழனி நோக்கி
நடந்து
உழுது விதைத்து
உழைத்து விளைத்து
அறுத்து அடித்து
குத்திப் புடைத்து
புதுப்பானையில் போட்டு
பொங்கலை வைத்து
அது பொங்கும் வேளையில்
மங்களம் தங்க
மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் – என்று
குலவையிட்டு கொண்டாடும் நாள்!

உழைத்த வேர்வையின் உப்பு
இனிப்பாக மாறும் இந்நாள்
அறுவடைப் பெருநாள்!
அதுவே
தமிழர் திருநாள்!

உழவுக் குடியோர் உயிர் மாய்த்தபோதும்
நம் மீனவச் சொந்தங்கள்
துயரக்கடலில் மூழ்கியபோதும்
துன்பமும் துயரமும்
வறுமையும் ஏழ்மையும்
நம்மைத் துரத்தி, வருத்தி வீழ்த்தியபோதும்
மீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி
தழைக்கும் பிழைக்கும் என்ற நம்பிக்கையில்
பொங்கட்டும்
தமிழர் உள்ளங்களிலும்
இல்லங்களிலும்
புரட்சிப் பொங்கல்!

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்!
நாம் தமிழர்!

— சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅநீதிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! விடியும் பொழுது தமிழருக்கானதாய் விடியட்டும்! – சீமான் வாழ்த்து
அடுத்த செய்திவேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துபோகச் செய்யும் முயற்சியேயாகும்! – சீமான் கடும் கண்டனம்