கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி விவசாயிகளுக்கு துயர் துடைப்புத் தொகை வழங்கக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் – சீமான் எழுச்சியுரை

62

வரலாறு காணாத அளவு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு துயர் துடைப்புத் தொகை உடனே வழங்கக்கோரியும், போலி ஒப்புதல் சீட்டைக் கொண்டு கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடப்படுவதைக் கண்டித்தும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகும் சீர்காழி, பழைய பாளையத்தில் இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை உடனடியாக மூடக்கோரியும்,
நாம் தமிழர் கட்சி சார்பாக 26-12-2022 திங்கள்கிழமையன்று மாலை 03 மணியளவில், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் மக்கள்திரள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.