க.எண்: 2022120570
நாள்: 14.12.2022
அறிவிப்பு:
எது உண்மையான சமூகநீதி?
குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி
மாபெரும் பொதுக்கூட்டம்
(டிச.17, முதுகுளத்தூர்)
உண்மையான சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு, குடிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்திடக் கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 17-12-2022 சனிக்கிழமையன்று மாலை 05 மணியளவில், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
தலைமை: செந்தமிழன் சீமான் இடம்: முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் நாள்: 17-12-2022 சனிக்கிழமை, |
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு