உலக ஆணழகன் போட்டியில்
5வது முறையாக பட்டம் வென்றுள்ள
தம்பி இராஜேந்திரன் அவர்களுக்கு
நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்!
தாய்லாந்து நாட்டிலுள்ள புகேட் நகரில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த தம்பி ராஜேந்திரன் மணி அவர்கள் 5வது முறையாக பட்டம் வென்றுள்ள செய்தியறிந்து மகிழ்வுற்றேன். 100 கிலோ எடை கொண்டவர்களுக்கானப் பிரிவில், 44 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குபெற்ற இப்போட்டியில் எல்லோரையும் வீழ்த்தி, வெற்றிவாகை சூடியிருப்பது கொண்டாடத்தக்கது.
மிகவும் எளியப் பின்புலத்தில் பிறந்து, தனது கடின உழைப்பாலும், ஒப்பற்ற செயல்திறனாலும் உயர்ந்து, ஆணழகன் போட்டியில் உலகளவில் பட்டம் வென்றிருக்கிற தம்பி ராஜேந்திரன் மணி அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னும் பற்பல சாதனைகள் புரிந்து, தமிழ் மண்ணுக்குப் பெருமைகள் பலவற்றைத் தேடித் தர வேண்டுமெனும் பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்!
உலக ஆணழகன் போட்டியில்
5வது முறையாக பட்டம் வென்றுள்ள
தம்பி இராஜேந்திரன் அவர்களுக்கு
எனது உளப்பூர்வமான வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.https://t.co/RcfDNj2jEX pic.twitter.com/2k0TAmSzAf— சீமான் (@SeemanOfficial) December 12, 2022
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி