அறிவிப்பு: மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (செப்.23, சென்னை தி.நகர்) (நாள் மாற்றம்)

149

க.எண்: 2022090407

நாள்: 14.09.2022

அறிவிப்பு:
மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
(செப்.23, சென்னை தி.நகர்)
(நாள் மாற்றம்)

கொள்கை விளக்கப் பேருரை:

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

இடம்: தி.நகர் பேருந்து நிலையம் அருகில்,
முத்துரங்கன் சாலை,
தியாகராய நகர், சென்னை

நாள்: 23-09-2022 வெள்ளிக்கிழமை, மாலை 04 மணியளவில்

‘இலவசம் வளர்ச்சித் திட்டமா? கவர்ச்சித் திட்டமா?, இலவசம் ஏற்றமா? ஏமாற்றமா?, இலவசம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவா? வாக்கைப் பறிக்கவா?’ என்று பல்வேறு கேள்விகளை முன்னிறுத்தி, வருகின்ற 23-09-2022 வெள்ளிக்கிழமையன்று மாலை 04 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், சென்னை, தியாகராயநகரில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.

இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திபெரியார் பெயரில் உணவகம் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் தொடுத்திட்ட இந்து முன்னணியினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அடுத்த செய்திகுமரி கனிம வளக்கொள்ளையர்களால் ‘நியூஸ் தமிழ்’ செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கொடிய அடக்குமுறையாகும்! – சீமான் கண்டனம்