துயர் பகிர்வு:
புதுக்கோட்டை வடக்கு நகரத் துணைத்தலைராக சிறப்புற செயலாற்றி வந்த ஆருயிர் இளவல் க.பிரபாகரன் அவர்கள் நேற்று (26.08.22) நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.
எனது அன்பிற்குரிய தம்பி, தங்கைகள் பயணம் மேற்கொள்ளும்போது மிக கவனமாக செல்ல வேண்டுமென்று நான் பலமுறை கண்டிப்புடன் வலியுறுத்தியுள்ளேன்.
வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் செல்லுங்கள். உங்களுடைய சிறு அலட்சியமும்கூட பேரிழப்பை ஏற்படுத்திவிடும் என்ற உண்மையை மனதில் நிறுத்தி பயணப்படுங்கள்.
நடந்து முடிந்த புதுக்கோட்டை நகர்மன்றத் தேர்தலில் 26வது சிறகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட ஆகச்சிறந்த களப்போராளியான தம்பி பிரபாகரனின் இழப்பானது அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது நாம் தமிழர் கட்சிக்கும், தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
தம்பியை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கட்சி உறவுகளுக்கும் எனது ஆறுதலை தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி