சுற்றறிக்கை: விருகம்பாக்கம் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

128

சுற்றறிக்கை: விருகம்பாக்கம் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்த
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

‘தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் வருகின்ற
27-08-2022 அன்று மாலை 05 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக சென்னை, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் சந்தைப்பகுதியில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.

இப்பொதுக்கூட்டத்திற்கான நிகழ்வு ஒருங்கிணைப்பு மற்றும் களப்பணிகள் குறித்து கலந்தாய்வு செய்து திட்டமிடுவதற்காக 25-08-2022 அன்று மாலை 05 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், மாநிலப் பொறுப்பாளர்கள் தலைமையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.

இக்கலந்தாய்வில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருமஞ்சனக் கட்டணம் பெற பண்டாரத்தினரே உரித்தானவர்கள்! – உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு
அடுத்த செய்திஅண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்க! – சீமான் வலியுறுத்தல்