க.எண்: 2022070307
நாள்: 15.07.2022
அறிவிப்பு: அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழா
தமிழ்ப் பேரினத்தின் மாமன்னன், அரசனுக்கு அரசன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என பல்வேறு நாடுகளை வென்று புலிக்கொடி நாட்டி, தமிழனின் வீரத்தை உலகறியச் செய்த வீரமிகு நமது பெரும்பாட்டன் அரசேந்திரச்சோழன் (இராசேந்திரச் சோழன்) அவர்களின் பிறந்தநாளினை மிகச்சிறப்பாக கொண்டாடும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பாக, அவர் பள்ளிப்படை அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியம், பிரம்மதேசம் கிராமத்தில் வருகின்ற 21-07-2022 வியாழக்கிழமையன்று மாலை 04 மணியளவில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் ‘அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழா’ தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.
பெருவிழாப் பேருரை: செந்தமிழன் சீமான் நாள்: சூலை 21, வியாழக்கிழமை மாலை 04 மணியளவில் இடம்: பிரம்மதேசம் கிராமம் |
இப்பெருவிழா நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல(நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி