விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

221

க.எண்: 2022070318

நாள்: 20.07.2022

அறிவிப்பு:

       சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக 23-07-2022 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் (ஓ.டி. – பழைய நகரம்), உழவர் சந்தை அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இடம்: அம்பத்தூர் (ஓ.டி. – பழைய நகரம்),
உழவர் சந்தை அருகில், திருவள்ளூர் மாவட்டம்
 

நாள்: 23.07.2022 சனிக்கிழமை
காலை 10 மணியளவில்

 

கண்டனப் பேருரை:

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

நாம் தமிழர் கட்சி