அறிவிப்பு: சூலை 31, சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எண்ணூர்

259

க.எண்: 2022070325
நாள்: 26.07.2022

அறிவிப்பு: சூலை 31, சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எண்ணூர்

எண்ணூரின் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் TANTRANSCO
சட்ட விதிகளை மீறி
, ஆக்கிரமித்துக் கட்டி வரும் தொடரமைப்பு கோபுரங்களின் கட்டுமானத்தை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில், சூலை 31, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

தலைமை:

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

இடம்: எண்ணூர்
(மாநகராட்சி அலுவலகம் அருகில்)

நாள்: 31-07-2022, ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10 மணியளவில்

இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்