தமிழர் எழுச்சி நாள் விழா களப்பணிகள் குறித்த திருவள்ளூர் மாவட்டக் கலந்தாய்வு – தலைமையகம்

293

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் நவம்பர் 26 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டு வருகின்ற இம்முறை திருவள்ளூர் மாவட்டம் சார்பாக முன்னெடுக்கப்படவிருக்கின்றது.

அதற்கான களப்பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி செயற்படுத்தும் பொருட்டு, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள் முன்னிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு இன்று 08-11-2021 பிற்பகல் 03 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்தாய்வில், தமிழர் எழுச்சி நாள் விழா திருவள்ளூர் மாவட்டம் சார்பாக மாதவரம் தொகுதியில் நடத்துவது எனவும், மாதவரம், கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், பொன்னேரி ஆகிய தொகுதிகள் விழாவை முன்னின்று ஒருங்கிணைப்பது எனவும் மற்ற தொகுதிகள் களப்பணிகளில் முழு ஒத்துழைப்பு வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திகனமழையால் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஅறிவிப்பு: நவ.26, தமிழர் எழுச்சி நாள் விழா – செங்குன்றம் | திருவள்ளூர் மாவட்டம்