அறிவிப்பு: நவ.26, தமிழர் எழுச்சி நாள் விழா – செங்குன்றம் | திருவள்ளூர் மாவட்டம்

474

க.எண்: 2021110262
நாள்: 06.11.2021

அறிவிப்பு: நவ.26, தமிழர் எழுச்சி நாள் விழா – செங்குன்றம்

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67ஆம் ஆண்டு  பிறந்தநாளையொட்டி, வருகின்ற 26-11-2021 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் ஜி.எஸ்.டி சாலையில் அமைந்துள்ள செங்குன்றம் நெல் மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க திருமண மாளிகையில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தமிழர் எழுச்சி நாள் விழா கொண்டாடப்படவிருக்கின்றது.

நவம்பர் 26
தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!


தமிழர் எழுச்சி நாள் விழா
விழாப் பேருரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
செங்குன்றம் நெல் மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க திருமண மாளிகை
செங்குன்றம் ஜி.எஸ்.டி சாலை, சாமியார் மடம் அருகில்
26-11-2021 வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில்

திருவள்ளூர் மாவட்டம்

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பேரெழுச்சியாக, பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி