தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் நினைவுப் படத்திறப்பு விழா – சீமான் எழுச்சியுரை | கடலூர்

55

அண்மையில் மறைவெய்திய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் போராளியுமான வா.கடல்தீபன் அவர்களின் நினைவுப் படத்திறப்பு விழா, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 21-11-2021 அன்று காலை 10 மணியளவில், கடலூர் டி.வி.எம்.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

வா.கடல்தீபன் அவர்களின் போராட்ட வாழக்கை, களப்பணிகள் குறித்த நினைவுக் காணொளி தொகுப்பு திரையிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார், மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஏகாம்பரம், தமிழர் கழக கடலூர் மாவட்டத் தலைவர் பரிதி வாணன், நாம் தமிழர் தொழிற்சங்கத் தலைவர் அன்புத்தென்னரசன், மாநில ஒருங்கிணைப்பாளார்கள் பொறியாளர் வெற்றிக்குமரன், கல்வியாளர் ஹூமாயூன் கபீர், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் ஜெகதீசப் பாண்டியன், மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் திருவாரூர் சக்திவேல், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அமுதா நம்பி, காளியம்மாள், கடலூர் மாவட்டச் செயலாளர் சாமி ரவி, மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.

நிகழ்வின் இறுதியாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நினைவேந்தல் பேருரையாற்றினார். முன்னதாக வா.கடல்தீபன் அவர்களின் நினைவுப் படத்தைத் திறந்து வைத்து நினைவுச் சுடரேற்றி மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தினார்.

சீமான் எழுச்சியுரை:

முழு நிகழ்வு:

செய்தியாளர் சந்திப்பு: