அறிவிப்பு: தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் நினைவுப் படத்திறப்பு விழா கடலூர் – நவம்பர் 21 

25

க.எண்: 2021110271அ

நாள்: 15.11.2021

அறிவிப்பு: தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் நினைவுப் படத்திறப்பு விழா
கடலூர் – நவம்பர் 21 

அண்மையில் மறைவெய்திய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் போராளியுமான அண்ணன் வா.கடல்தீபன் அவர்களின் நினைவுப் படத்திறப்பு விழா, தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற 21-11-2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில், கடலூர் டி.வி.எம்.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.

தமிழ்த்தேசியப் போராளி!
வா.கடல்தீபன் படத்திறப்பு விழா
நினைவேந்தல் உரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
கடலூர் டி.வி.எம்.எஸ். திருமண மண்டபம்
தினத்தந்தி அலுவலகம் அருகில், கடலூர்
21-11-2021 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில்

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பேரெழுச்சியாக, பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்