அறிவிப்பு: குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

547

க.எண்: 2021100231
நாள்: 06.10.2021

முக்கிய அறிவிப்பு:

குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக

கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து,  நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 03 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.

தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான்
தலைமையில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
10-10-2021 ஞாயிற்றுக்கிழமை, மாலை 03 மணியளவில்

தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில்
கன்னியாகுமரி மாவட்டம்

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று போராட்டத்தை மாபெரும் வெற்றியடைய செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் அமெரிக்கா – பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதி குருதி பரிசோதனை முகாம்